Published : 18 Mar 2015 08:38 AM
Last Updated : 18 Mar 2015 08:38 AM

ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை, பொருள் வாங்க பான் எண்ணை கட்டாயமாக்குவதால் கருப்பு பணம் குறையும்: நிபுணர்கள் வரவேற்பு; வியாபாரிகள் எதிர்ப்பு

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகையோ, பொருளோ வாங்கினால் பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் கருப்பு பணப் புழக்கம், வருமான வரி ஏய்ப்பு கட்டுப்படுத்தப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட நகை அல்லது பொருட்களை வாங்கும் போது பான் எண் கட்டாயம் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது. வருமானவரி ஏய்ப்பு செய் பவர்களை இதன்மூலம் எளிதில் கண் டறியலாம் என்று அரசு கருதுகிறது. வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பித்துக்கொள்ள பலரும் பலவிதமான வழிகளை கடைப்பிடிக்கின்றனர். குறிப்பாக தங்கத்தில் பலர் முதலீடு செய் கின்றனர். தங்களிடம் இருக்கும் பணத்தை நகைகளாக மாற்றி வைத்துக்கொள்கின்றனர்.

இதுகுறித்து கேட்டபோது ஆடிட்டர் எம்.ஆர்.வெங்கடேஷ் கூறியதாவது: ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட நகைகள், பொருட்களை யார் யார், எத்தனை முறை வாங்கு கின்றனர் என்பதைக் கண்காணிக் கும் நோக்கிலேயே பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம் ஆக்கப் படுகிறது. அதேபோல, ரூ.20 ஆயிரத் துக்கு மேல் பொருட்கள் வாங்கு வது என்றால் காசோலை மூலமாகத் தான் தொகை செலுத்த முடியும்.

மத்திய அரசின் இந்த நடவடிக் கையை தனிநபர் மீதான நட வடிக்கையாக பார்க்காமல் தேச நலனுக்கான நடவடிக்கையாக பார்க்க வேண்டும். இதனால் கருப்பு பண புழக்கத்தை தடுக்க முடியும். வருமான வரி ஏய்ப்பு குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இத்திட்டத்துக்கு நகை வியா பாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுபற்றி மெட்ராஸ் தங்க நகை, வைர வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார் கூறும் போது, “பான் எண்ணை கட்டாய மாக்கினால் தங்க நகை வர்த்தகம் பாதிக்கப்படும். சாதாரண மக்கள் கூட பணத்தை சேமித்து திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கு வார்கள். அதுபோன்ற நடுத்தர வர்க்க நுகர்வோரை அரசின் இந்த நடவடிக்கை பாதிக்கும். நகை வாங்க பான் எண் கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை அரசு நீக்க வேண்டும்’’ என்றார்.

பான் கார்டு எப்படி வாங்குவது?

பான் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை incometaxindia.gov.in மற்றும் tin.tin.nsdl.com போன்ற இணையதளங்களில் ஆன்லைன் வழியாக பூர்த்தி செய்து கொடுக்க லாம். அது மட்டுமின்றி, பான் கார்டு களை பொதுமக்களுக்கு வாங்கித் தர சில ஏஜென்சிகளை அரசு நிய மித்துள்ளது. அதுபோன்ற ஏஜென்சி களிடம் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து தரலாம். ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் 2 சான்றி தழின் நகலை இணைக்கவேண்டும். ரூ.100 கட்டணம் செலுத்தவேண்டும். இதே நடைமுறைகளை பின்பற்றி வருமான வரி அலுவலகங்களிலும் பான் கார்டு பெற முடியும். விண்ணப்பித்த 2 வாரத்துக்குள் பான் கார்டு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x