500 டாஸ்மாக் கடைகளை மூடியதால் ரூ.6,636.08 கோடி வருவாய் இழப்பு

500 டாஸ்மாக் கடைகளை மூடியதால் ரூ.6,636.08 கோடி வருவாய் இழப்பு
Updated on
1 min read

500 டாஸ்மாக் கடைகள் மூடியதால் அரசுக்கு ரூ.6636.08 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின்னர் முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதில் ஒன்று படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதும் ஒன்று.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) தமிழக சட்டப்பேரவையில், 2016-17 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அவர் தனது பட்ஜெட் உரையில், 500 டாஸ்மாக் கடைகள் மூடியதால் அரசுக்கு ரூ.6636.08 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in