

இன்று முதல் 3 நாட்களுக்கு தென் கடலோர பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு தென் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத் தில் தமிழகத்தில் 68 செ.மீ. மழை பெய்துள்ளது. இது ஆண்டு சராசரி யான 44 செ.மீட்டரை காட்டிலும் 53 சதவீதம் அதிகமாகும். கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்துள்ளது.
ஆனால், மதுரை, கோவை, திருப்பூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் மழை போதுமான அளவு பெய்யவில்லை.