தியாகராஜனின் ஆங்கில உரையை விமர்சனம் செய்த கருணாஸ்: சட்டப்பேரவையில் திமுக கடும் எதிர்ப்பு

தியாகராஜனின் ஆங்கில உரையை விமர்சனம் செய்த கருணாஸ்: சட்டப்பேரவையில் திமுக கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் திருவாடானை தொகுதி எம்எல்ஏ வான முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேசும்போ து, மதுரை மத்திய தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தியாகராஜன், ஆங்கிலத்தில் உரையாற்றியது தொடர்பான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கருணாஸ் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு திமுக தரப்பில் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பான விவாதம்:

எதிர்க்கட்சித் தலைவர் மு. க.ஸ்டா லின்:

கருணாஸ் ஏதோ கற்பனை யாக பேசுகிறார். அவர் கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

பேரவைத் தலைவர் பி.தனபால் :

அவர் பேசியதும், எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்பை பதிவு செய்த தும் அவைக்குறிப்பில் இருக்கும். அதை அப்படியே விட்டுவிடுங்கள்

மீண்டும் கருணாஸை அவைத் தலைவர் பேச அழைத்தார். அவர் சங்கம் வளர்த்த மதுரையில் என பேசத் தொடங்கினார். மீண்டும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:

இந்த சபையில் நீங்கள் அனுமதித்தால் தெலுங்கில் கூட பேசலாம். ஆனால், தியா கராஜன் பேசியதை விமர்சிக்கக் கூடாது.

பேரவைத் தலைவர் தனபால்:

கருணாஸ் பேசியது அவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தை அல்ல. இதில், எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் இருவருடைய எதிர்ப்பும் பதிவு செய்யப்படும்.

மு.க.ஸ்டாலின்:

கருணாஸ் கூறுவது, தியாகராஜன் பேச்சை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. கடந்த முறை காங்கிரஸ் உறுப்பி னர் கோபிநாத் தெலுங்கில் பேசி யபோது, முதல்வரும் அவருக்கு தெலுங்கிலேயே பதிலளித்தார். அதை விமர்சிக்கலாமா? சட்டப் பேரவை விதிகளில் அத்தியாயம் 14-ல், தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வாதத்தை எடுத்து வைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

துரைமுருகன்:

இந்த அவைக்கு கருணாஸ் புதியவர். இவர் இவ்வாறு இன்னொரு உறுப்பி னரை புண்படுத்துவது நியாயமா?

பேரவைத் தலைவர் தனபால்:

கருணாஸ் பேசக்கூடாத வார்த்தையை பேசவில்லை. உங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளேன். எனவே அவர் பேசியதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. கருணாஸுக்கு தியாகராஜனே பதிலளிக்கலாம்.

பழனிவேல் தியாகராஜன் (திமுக):

தமிழில் உள்ள நுட்பமான வார்த்தைகள் எனக்கு தெரியாது. நான் பொருளாதாரம் படித்தபே ாது, ஆங்கிலத்தில் படித்தேன். அதனால்தான் ஆங்கிலத்தில் பேசி னேன். கருணாஸுடன் விவாதம் செய்ய தயாராக உள்ளேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in