

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
கோடைக்காலம் தொடங்க வுள்ள நிலையில், இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் கொடுமை மக்களை வாட்டி வதைக் கிறது. எனவே, கோடை வெப் பத்தை சமாளிக்கும் வகையில் மக்களுக்கு தேமுதிக சார்பில் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.
ஆண்டுதோறும் கட்சி நிர்வாகி களும், தொண்டர்களும் மக்க ளுக்கு தண்ணீர் பந்தல்கள் அமைத்து தங்களால் இயன்ற அளவுக்கு உதவுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம் ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.