

தமிழகத்தில் காவிரி டெல்டா, வைகை, பெரியாறு, தென் பெண்ணை, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட ஆற்றுப் பாசனம் மற்றும் கண்மாய், ஏரி, கால்வாய் பாசனம் அதிகம் உள்ள மாவட்டங்களில் விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. இந்த பகுதி விவசாயிகள் உழவுக்காக காளைகள் வளர்ப்பி லும், பால் உற்பத்திக்காக பசு வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். பால் உற்பத்தியில் வருவாய் கிடைப் பதால், பசு வளர்ப்பில் சமீப கால மாக அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
தினமும் 2 கோடி லிட்டர் பால்
சமீபத்திய ஜல்லிக்கட்டு போராட் டத்துக்குப் பிறகு காளைகள், நாட்டு மாடுகள் வளர்ப்பு கிராமங் களில் அதிகரித்துள்ளது. தமிழகத் தில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட பசு, காளை மாடுகளும், 5 லட்சத் துக்கும் மேற்பட்ட எருமை மாடு களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தினமும் சுமார் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது.
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள், உழவுப் பணிகளுக் காக காளைகளைப் பயன்படுத்து வதால் கடந்த ஓர் ஆண்டாக கால் நடை வளர்ப்பு தொழிலில் மறு மலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், மாநிலத்தில் இந்த ஆண்டும் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தண்ணீர், தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள தால் மேய்ச்சல் நிலம், தீவனம் கிடைக்காமல் மாடுகள் ஜீவாதாரப் போராட்டத்தில் உள்ளன.
அதனால், கால்நடைகளைக் காப் பாற்ற தமிழகத்தில் 32 மாவட்டங் களில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மானிய விலை வைக்கோல் டெப்போ திறக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் வாரம் 105 கிலோ வைக்கோல் வழங்குகின்றனர். அதனால், தற்போது ஒரு ஏக்கர் வைக்கோல் 17 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. ஆனாலும், வைக் கோல், தீவனம், தண்ணீர் போதிய அளவு கிடைக்காததால் விவசாயி கள் கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் அவற்றை அடிமாட் டுக்கு விற்க ஆரம்பித்துள் ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சந்தை, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தையில் இருந்து கேரளாவுக்கு அடிமாடுகள் விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது இதுகுறித்து கால் நடை மருத்துவர் ஒருவர் கூறிய தாவது:
தண்ணீர், தீவனம் இல்லாவிட் டால் மாடுகளை வளர்க்க முடியாது. 10 லிட்டர் பால் கறக்கக் கூடிய மாட்டுக்கு தினமும் 30 முதல் 40 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு தேவைப்படுகிறது. குளிப்பாட்ட, மற்ற பயன்பாட்டுக்கும் சேர்த்தால் 70 முதல் 90 லிட்டர் தண்ணீர் தேவை.
கோடைக் காலத்தில் இந்த தண்ணீர் மாடுகளுக்கு கிடைப்ப தில்லை. தினமும் ஒரு மாடு 25 முதல் 30 கிலோ வரை பசுந்தீவனமும், 5 கிலோ உலர் தீவனத்தையும், 3 கிலோ அடர் தீவனத்தையும் உட்கொள்ளும். தீவனம், தண்ணீர் பற்றாக்குறையால் தற்போது பால் உற்பத்தி குறைந்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால் அஜீரணக் கோளாறு, வயிறு ஊது வது அதிகரித்துள்ளது. விவசாயி கள் மாடுகளைக் காப்பாற்ற முடிந்த வரை முயற்சிக்கின்றனர். அது முடியாதபட்சத்திலேயே அடிமாட் டுக்கு விற்கின்றனர்.
மஞ்சள் காமாலை
தண்ணீர் பற்றாக்குறையால் மாடுகளுக்கு சிறுநீர் குறைபாடு ஏற்பட்டு மஞ்சள் காமாலை ஏற் படுகிறது. அறுவடைக்கு பிறகு வயல்களில் மேய்வதற்கு வெயி லில் கட்டிப் போடுவதால், மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஈ, பூச்சிகள் தொல்லையும் அதிகம். அதனால், இந்த கோடைக் காலம் மாடுகளுக்கு இயல்பாகவே உயிர்ப் போராட்டம்தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.