

தெற்கு அந்தமான், லட்சத் தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 24, 25 தேதிகளில் அந்தமான் தீவுகளில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஆந்திராவில் ஹெலன் புயல் கரை கடந்த பின்னரும் அங்கு மழை நீடித்து வருகிறது. ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் குடிவாடாவில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.