Published : 29 Apr 2017 10:53 AM
Last Updated : 29 Apr 2017 10:53 AM

டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க ராமதாஸ் கோரிக்கை

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு மூடப்பட்டுள்ள 3321 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய 15,000 டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழகம் முழவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதற்கு பாமக நடத்திய சட்டப் போராட்டமே காரணம் என்று கூறியுள்ளார். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை வரவேற்கும் அதே நேரத்தில் அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கிட அரசு வழி வகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள விவரங்கள்….

”கடந்த 2006&ஆம் ஆண்டில், டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை அரசுத் துறைகளில் காலியிடங்கள் ஏற்படும்போது நியமித்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்து டாஸ்மாக்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கடிதம் எழுதினார். அதேபோல் இப்போதும் டாஸ்மாக் நிறுவனத்தின் உபரிப் பணியாளர்களாக காத்திருக்கவைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களை அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுத் துறைகளில் நியமிக்கும்படி தமிழக அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் பரிந்துரைக்க வேண்டும்.

அதனடிப்படையில் உபரிப் பணியாளர்களை அரசுத்துறை நிறுவனங்களில் நியமிக்க வேண்டும். தமிழக அரசுத் துறைகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு பல ஆண்டுகளாகஎந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் அரசுத்துறைகளில் பணிகள் பாதிக்கக்கப்பட்டிருக்கின்றன”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x