

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் பிப்ரவரி 1.ல் டெசோ கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தலைவர் கலைஞர் தலைமையில் 1.2.2014 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். அதுபோது டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.