விழுப்புரம்: அவதூறு வழக்கில் விஜயகாந்த் ஆஜர்

விழுப்புரம்: அவதூறு வழக்கில் விஜயகாந்த் ஆஜர்
Updated on
1 min read

தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று ஆஜரானார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பொன்.சிவா வழக்கு பதிவுசெய்திருந்தார்.

இந்த வழக்கி்ல் கடந்த 25-ம் தேதி விஜயகாந்த் ஆஜராகாததால், விழுப்புரம் நீதிமன்றம் பிணையில் வரக்கூடிய பிடிவாரண்ட்டைப் பிறப்பித்திருந்தது. இதனை தளர்த்தக் கோரி 26-ம் தேதி தே.மு.தி..க சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீதான விசாரணைக்கு இன்று (திங்கள்கிழமை) விஜயகாந்த் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 3-ம் தேதி நீதிபதி கிருஷ்ணமூர்த்தி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in