சுற்றுச்சூழல் கல்வி அவசியம்: சுற்றுச்சூழல் அறிஞர் கோவை சதாசிவம்

சுற்றுச்சூழல் கல்வி அவசியம்: சுற்றுச்சூழல் அறிஞர் கோவை சதாசிவம்
Updated on
1 min read

‘யாதும் ஊரே’ என்னும் பெயர் இந்த நிகழ்ச்சிக்கு மிக பொருத்தமாக உள்ளது. நீர்நிலைகளின் பாதுகாப்பை வலியுறுத்திய வள்ளுவருக்காக ஏரியை ஆக்கிரமித்து கோட்டம் அமைத்துள்ளோம்.

அசாம் மாநிலத்திலுள்ள குக்கிக்கிராமம் ஒன்றில் பிறந்த முலாய் என்னும் தனி மனிதர், வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்ற ஒரு காட்டையே உருவாக்கினார்.

‘யாதும் ஊரே’ நிகழ்ச்சியில் ஆயிரமாயிரம் முலாய்கள் உள்ளனர். இத்தனை பேர் சேர்ந்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தை முன்னெடுக்க முடியும்.

பள்ளிகளில் சுற்றுச்சூழல் கல்வியை போதிக்க வேண்டும். மண்ணிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்வதில்லை, கற்றுக் கொடுப்பதுமில்லை.

அதற்கான முயற்சியை ‘யாதும் ஊரே’ முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. கூவத்தை தேம்ஸ் நதி மாதிரி மாற்ற வேண்டும் என்ற ஆவல் நம்மிடம் உள்ளது.

அதற்கு முன்பாக நதி பற்றிய பண்பாட்டை அறிந்து கொள்ள வேண்டும். பெண்களின் பெயர்களை கொண்டுள்ளதால் தான் நதிகள் அதிகம் பாழ்படுத்தப்படுகின்றனவோ என்று தோன்றுகிறது.

சாமியார் தலைகளில் பூக்களை கொட்டும் நாம், நதிகளில் கழிவுகளை கொட்டுகிறோம். நீர்நிலைகளை பாதுகாக்க நாம் ஒன்றிணைய வேண்டும்.

என்று சுற்றுச்சூழல் அறிஞர் கோவை சதாசிவம் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in