

சென்னை பட்டினப்பாக்கத்தில் கண்ணன் என்பவர் கடந்த 4-ம் தேதி வழிப்பறியில் ஈடுபட்டபோது சீனிவாசபுரம் குடிசை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை நந்தினி(24), சாகர்(65) ஆகியோர் உயிரிழந்த னர். நந்தினியின் உறவினர் நஜ்ஜூ(21) என்ற கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார். போலீஸார் கண்ணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து சீனிவாச புரத்தைச் சேர்ந்த பெண்கள் அங்குள்ள டாஸ்மாக் கடையால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறி, அதனை மூட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 5-ம் தேதி முதல் மதுக் கடையை முற்றுகையிட்டு இவர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5-வது நாளாக போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீஸார் கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது போலீஸாருக்கும் பெண்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த இடம் பரபரப்பானது. அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 பேரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கடந்த 5 நாட்களாக அந்த மதுக்கடை திறக்கப்படவில்லை. இதை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.