பெங்களூர் தீர்ப்பையொட்டி நடந்த வன்முறை சம்பவங்கள்: அரசு நடவடிக்கை குறித்து 8 வாரத்தில் அறிக்கை தாக்கல்

பெங்களூர் தீர்ப்பையொட்டி நடந்த வன்முறை சம்பவங்கள்: அரசு நடவடிக்கை குறித்து 8 வாரத்தில் அறிக்கை தாக்கல்
Updated on
1 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்வுடன் தமிழகத்தில் பஸ் எரிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சட்டம் - ஒழுங்கு பரா மரிக்கப்படுவதை கண்காணிக்க அரசுக்கு உத்தரவிடவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் வழக்குத் தொடர்ந்தார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு, இந்த வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:

முன்னாள் முதல்வர் கைது காரணமாக நடந்த சம்பவங்கள் குறித்த அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை மொத் தம் 7,404 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும், முக்கிய சம்பவங்கள் தொடர்பாக 180 வழக்குகள் பதியப்பட்டு, 238 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக வும் தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டனை அனுபவிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும்.

மேற்படி வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இறுதி அறிக்கை அதிகபட்சம் 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்படும் என்று அட்வ கேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். எனவே, இதுதொடர்பாக மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. மேற்படி உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in