

சமயபுரம் மற்றும் ஜெயங்கொண் டம் அருகே நேரிட்ட இருவேறு விபத்துகளில் 6 பேர் இறந்தனர்.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப் பத்தைச் சேர்ந்தவர் சேகர்(50). இவர் உட்பட 8 ஆண்கள், 10 பெண்கள், 6 குழந்தைகள் என 24 பேர் நேற்று முன்தினம் திருச்செந்தூரில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்றனர். பின்னர் அங்கிருந்து ஊர் திரும் பினர். கடலூர் மாவட்டம் பச்சங் குப்பத்தைச் சேர்ந்த திலீபன்வேலு (21) வேனை ஓட்டினார்.
நள்ளிரவு 12.10 மணியளவில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள பள்ளிவிடை பாலத் தின் அருகே சென்றபோது, பழு தாகி சாலையில் நிறுத்தப்பட்டி ருந்த லாரியின் பின் பகுதியில் மோதி வேன் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த சேகர், கடலூர் மாவட்டம் பச்சங் குப்பத்தைச் சேர்ந்த ராஜன் மகன் புவனேஷ் (15), கடலூர் வில்வ நகரைச் சேர்ந்த புருஷோத் தமன் மகள் சுமிதா (21) ஆகி யோர் வழியிலேயே இறந்தனர். மேலும் காயமடைந்த 21 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டனர். சமயபுரம் போலீஸார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநர் செந்திலை தேடிவருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே…
தஞ்சை மாவட்டம் வேப்பங் குளம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலா மணியின் மகன் சிவானந்தம்(36). சென்னையில் வேலை பார்த்து வந்தார். அண்மையில் ஊருக்கு வந்த சிவானந்தம் , நேற்று முன் தினம் இரவு திருவாரூர் மாவட் டம் கோட்டூரைச் சேர்ந்த பாரதி மோகன்(39) என்பவரின் காரில் சென்னைக்குப் புறப்பட்டார். சிவா னந்தத்தின் உறவினர் அருண் என்பவரின் மகன் கோகுல கிருஷ்ணன்(14), சென்னையில் வேலை பார்த்துவரும் தந்தை யைப் பார்க்க காரில் உடன் சென்றார்.
கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள காடுவெட்டி அருகே நள்ளிரவு 12:45 மணியளவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதியது. இதில், பாரதிமோகன், சிவானந்தம், கோகுலகிருஷ்ணன் ஆகிய மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து, மீன்சுருட்டி போலீ ஸார் விசாரிக்கின்றனர்.