Published : 11 Jun 2016 10:51 AM
Last Updated : 11 Jun 2016 10:51 AM

சென்னை மியூசிக் அகாடமியில் கர்னாடக இசை டிப்ளமா படிப்பு: ஜூலை 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை மியூசிக் அகாடமியில் வழங்கப்படும் கர்னாடக இசை (வாய்ப்பாட்டு) அட்வான்ஸ்டு டிப்ளமா படிப்பில் சேர ஜூலை 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மியூசிக் அகாடமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மியூசிக் அகாடமி யில் கர்னாடக இசையில் (வாய்ப் பாட்டு) அட்வான்ஸ்டு டிப்ளமா படிப்பு வழங்கப்படுகிறது. இது 3 ஆண்டுகள் கொண்ட படிப்பு ஆகும். ஆண்டுக்கு 2 செமஸ்டர்கள் (ஜூலை முதல் நவம்பர் மற்றும் ஜனவரி முதல் ஜூன் வரை). இதற்கான வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடை பெறும். மொத்தம் 10 பேர் சேர்க் கப்படுவார்கள்.

இதில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். மனோதர்ம சங்கீத அறிவுடன் வர்ணம் மற்றும் கிருதிகள் பாடத் தெரிந்திருக்க வேண்டும். விண் ணப்பதாரர்கள் தங்கள் இசைப் பயிற்சி பற்றிய முழு விவரங் களுடன், தங்களைப் பற்றிய சுயவிவர குறிப்பை (பயோடேட்டா) அனுப்ப வேண்டும். அதில் இருந்து தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதுகுறித்து தகவல் தெரிவிக்கப் படும்.

இந்த இசைப் படிப்பில் சேர விரும்புவோர் ஜூலை 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும்.

மூத்த கர்நாடக இசைக் கலைஞர் கள் ஆர்.வேதவல்லி, திருச்சூர் ராமச்சந்திரன், பேராசிரியை ரித்தா ராஜன், ஆர்எஸ்.ஜெயலட்சுமி, பி.எஸ்.நாராயணசாமி, சுகுணா வரதாச்சாரி, வித்வான் நெய்வேலி சந்தான கோபாலன், எஸ்.சவுமியா, ஷியாமளா வெங்கடேஸ்வரன், வித்வான் ராம் பரசுராம் ஆகியோர் வகுப்பு எடுப்பார்கள். வகுப்புகள் ஜூலை 25-ம் தேதி தொடங்கும்.

கூடுதல் விவரங்கள் அறிய சென்னை ராயப்பேட்டை டிடிகே சாலையில் அமைந்துள்ள மியூசிக் அகாடமியை தொடர்பு கொள்ள லாம். தொலைபேசி எண்கள்: 044-28112231, 28115162.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x