

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி யால் சோர்ந்துவிடவில்லை என் றும், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டி யிடும் எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திருப்பூரில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழர்களின் வாழ்வாதாரங் கள் பாதுகாக்கப்பட வேண்டும். திமுக, அதிமுக ஆகிய ஊழல் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழ கம் விடுபட வேண்டும். தமிழ கத்தில் ஊழலற்ற அரசியல் அமையவே மக்கள் நலக் கூட்டணி உருவானது. நாங்கள் தொடர்ந்து பயணிப்போம். சட்டப்பேரவைத் தேர்தலில், பணத்தின் தாக்கம் அதிகம் இருந்ததால் மக்கள் நலக் கூட்டணியின் கொள்கைகள் சென்றடையவில்லை. சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வியால் நாங்கள் சோர்ந்துவிடவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும்.
முல்லை பெரியாறு, பாலாறு உட்பட தமிழக வாழ்வாதார விஷ யங்கள், ஈழப் பிரச்சினைக்காக போராடுவோம்.
திருப்பூரில் ஐஎஸ் அமைப்பு டன் தொடர்பு உடைய நபர் தங்கி யிருந்ததாகக் கூறப்படும் விவ காரத்தை பொறுத்தவரை, கண் காணிப்பை காவல்துறை தீவிர மாக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் வடமாநிலத் தொழி லாளர்களை துன்புறுத்தக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.