

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதைப்பந்துகள் மூலம் காடு வளர்க்கும் முயற்சியில் இளைஞர் கள் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்டுள்ள நம் நாட்டில், பருவ மழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இத னால் விவசாயம் பாதிக்கப்பட் டுள்ளது. குடிநீருக்கும் வழியில்லா மல் மக்கள் காலிக் குடங்களுடன் அலையும் அவல நிலை ஏற்பட்டுள் ளது. குடிநீருக்காக ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெறு கின்றன.
இந்நிலையில், சூழலுக்கு கேடு விளைவிப்பதுடன் நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அவ்வாறு சீமைக் கருவேல மரங்கள் அகற் றப்பட்ட இடங்கள் மற்றும் தரிசு நிலங்களில் பாரம்பரிய மரங்களை உருவாக்கும் விதமாக இளைஞர் களின் உதவியுடன் விதைப்பந்துகள் மூலம் மரங்களின் விதைகளை விதைக்கும் முயற்சியில் இயற்கை ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை ரோஸ் இயற்கை நிறுவன இயக்குநர் ஆதப்பன் கூறியதாவது: ‘‘மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டதன் விளை வுதான் பருவநிலை மாறுபாடு, வறட்சி, நோய் பாதிப்பு அதிகரிப்பு, மழை குறைவு போன்றவை. எனவே, பாரம்பரிய மரங்களை மீண்டும் உருவாக்க விதைப்பந்துகள் எனும் பழமையான முறையின் மூலம் விதைகளை விதைப்பது குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர் களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
சுமார் 3 விதைகளுடன் சிறிதளவு குப்பையைக் கைப்பிடி அளவு களி மண்ணுக்குள் வைத்து பந்துபோல உருட்டி விதைப்பந்துகளைத் தயார் செய்கிறோம். நன்கு காயவைத்த பிறகு, இந்த விதைப்பந்துகளை விரும்பும் இடங்களில் போட்டுச் செல்கிறோம். தற்போது, சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் உள்ள குழிகளில் அதிகமான விதைப்பந்துகளைப் போட திட்டமிட்டுள்ளோம்.
சீமைக் கருவேல மரங்கள் அகற் றப்பட்ட இடங்களில் மாற்று மரங் களை உடனே உருவாக்காவிட்டால் மீண்டும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துவிடும். உள்ளூரில் எளிதாகக் கிடைக்கக்கூடிய புளி, புங்கன், வேம்பு, இலுப்பை, தேத்தா மரம் போன்ற மரங்களின் விதை களை விதைப்பந்து தயாரிக்க பயன்படுத்துகிறோம்.
விதைகளை விலை கொடுத்து வாங்காமல் மரங்களில் இருந்து கீழே விழுந்து கிடக்கும் விதை களைச் சேகரித்து வைத்துக் கொள்கிறோம். விதைப்பந்து தொழில்நுட்பத்தின் உதவியால், அதில் உள்ள விதைகளின் முளைப்புத் திறன் 5 மாதங்கள் வரை பாதுகாக்கப்படுகிறது.
கோடை காலத்தில் விதைகள் எளிதாகக் கிடைக்கும் என்பதாலும், மாணவர்களுக்கு விடப்படும் கோடை விடுமுறையைப் பயன்படுத் திக்கொள்ளலாம் என்பதாலும் தற் போது மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
புதுக்கோட்டை மாவட்டம் நமணக்குடியில் உள்ள குளத்தில் விதைப்பந்து முறையில் மரங்களின் விதைகளை விதைக்கும் மாணவர்கள்.
கடந்த 1974-ம் ஆண்டு வறட்சி ஏற்பட்டபோது, குறைந்த ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது. ஆனால், உணவுதான் கிடைக்கவில்லை. தற்போது, இரண்டுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலை நீடித்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அப்படி ஒரு நிலை உருவாகாமல் தடுக்க பாரம்பரிய காடுகளால்தான் முடி யும். எனவே, விதைப்பந்து எனும் பழமையான தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்தால் பாரம்பரிய மரங் கள் வளர்ந்து தமிழகம் பசுமையான மாநிலமாகும்’’ என்றார்.
பாரம்பரிய மரங்களின் விதைகளுடன் குப்பையைச் சேர்த்து களிமண்ணால் விதைப்பந்து உருவாக்கும் மாணவிகள்.
புதுக்கோட்டை மாவட்டம் நமணக்குடியில் உள்ள குளத்தில் விதைப்பந்து முறையில் மரங்களின் விதைகளை விதைக்கும் மாணவர்கள்.