

அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 20 முதல் 28-ம் தேதி வரை செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெற வுள்ளன. பொதுத் தேர்வுக்கு விண் ணப்பித்துள்ள நேரடி தனித் தேர்வர்கள், ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தனித் தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறவுள்ள அறி வியல் பாட செய்முறை தேர்வு களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு தண்.வசுந்தராதேவி கூறியுள்ளார்.