Published : 16 Mar 2014 04:20 PM
Last Updated : 16 Mar 2014 04:20 PM

காங். வேட்பாளர் பட்டியலில் 25% இளைஞர்களுக்கு வாய்ப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் தயங்குவதால், வேட்பாளர் தேர்வில் இளைஞர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு செய்ய காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் திங்கள்கிழமை டெல்லி செல்லவுள்ளார். புதன்கிழமைக்குள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடித்த காங்கிரஸ் கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினை, விலைவாசி உயர்வு, 2 ஜி ஊழல் வழக்கு, நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசின் மீது பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில் கூட்டணி இல்லாத காரணத்தால், தமிழக காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் சிலர் தேர்தலில் போட்டியிடத் தயங்கியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் வேட் பாளர் பட்டியல் தயாரிப்புப் பணி தீவிரமாக நடக்கிறது. மூத்த தலைவர்களின் தயக்கம் காரணமாக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தேர்தல் குழுவின் முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது: மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜே.எம்.ஆரூண், சுதர்சன நாச்சியப்பன், விஸ்வநாதன், மாணிக் தாகூர், காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், பிரபு, மாவட்ட நிர்வாகிகள் மனோ, கராத்தே தியாகராஜன், என்.டி.எஸ்.சார்லஸ் உள்ளிட்ட ஒருசிலரே தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த வேட்பாளர் பட்டியலில், 25 சதவீதம் இளைஞர் காங்கிர ஸாருக்கு முன்னுரிமை அளிக்க ராகுல் காந்தி முடிவு செய் துள்ளார். 10 தொகுதிகளுக்கு அவர் தனது நேரடிக் கட்டுப் பாட்டிலுள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளைத் தேர்ந் தெடுக்கவுள்ளார். 25 சதவீதம் 50 வயதுக்கு குறைவானோருக்கும், 50 சதவீதம் மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகி களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x