அரளிப்பாறையில் சீறிப் பாய்ந்த காளைகள்: மலை மீது அமர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்தனர்

அரளிப்பாறையில் சீறிப் பாய்ந்த காளைகள்: மலை மீது அமர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்தனர்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரி அருகே அரளிப்பாறையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மலை மீது அமர்ந்து பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.

சிங்கம்புணரி அருகே அரளிப் பாறையில் குன்றக்குடி ஆதீனத் துக்கு உட்பட்ட பால தண்டாயுத பாணி சுவாமி கோயில் உள்ளது. இங்கு மாசி மகத் திருவிழாவின் 10-ம் நாளில் மஞ்சுவிரட்டு நடை பெறுவது வழக்கம். முல்லைமங்க லம், சதுர்வேதமங்கலம், கண்ண மங்கலம், சீர்சேர்ந்தமங்கலம், வேழமங்கலம் ஆகிய ஐந்துநிலை நாட்டார்கள் மஞ்சுவிரட்டு நடத்து வதும் வழக்கம்.

அதன்படி, மாசி மகத் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. குன்றக்குடி ஆதீனம் பொன்னம் பல அடிகளாரிடம் ஐந்துநிலை நாட்டார்கள் திருநீறு பெற்றனர். பிற்பகல் 1.30 மணிக்கு ஐந்து நிலை நாட்டார்கள் கோயில் காளை களுடன் ஊர்வலமாக வந்தனர். அதன்பின், தொழுவத்தில் இருந்து 90 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளை களை அடக்கினர்.

விருந்து

அதன்பிறகு, ஆங்காங்கே 500-க்கும் மேற்பட்ட காளை கள் அவிழ்த்து விடப்பட்டன. மாடு கள் முட்டியதில் 28 பேர் காய மடைந்தனர். இதில் துரை, கணேசன் ஆகிய இருவர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

மஞ்சு விரட்டை அரவன்கிரி மலையில் அமர்ந்து பெண்கள், குழந்தைகள் ஆயிரக்கணக் கானோர் ரசித்தனர். நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

அரளிப்பாறையைச் சுற்றியுள்ள அரளிப்பட்டி, சிங்கமங்கலப்பட்டி, மருதிப்பட்டி உள்ளிட்ட கிராமங் களில் மஞ்சுவிரட்டை காண வந்த வர்களுக்கு விருந்து படைத்து மகிழ்ந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in