சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்: திருச்சி கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்: திருச்சி கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

சென்னையிலிருந்து தூத்துக் குடிக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மத்திய பாகம் சிறப்பு எஸ்ஐ ஆசிர்வாதம் தலைமையில், ஊர்க்காவல் படையினர் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர், நேற்று அதிகாலை தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு காரை அவர் கள் சோதனையிட்டனர். ஒரு பையில் 5 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் சந்தேகப் படும்படியான பொருள் இருந்தது.

5 கிலோ ஹெராயின்

இதையடுத்து 3 பேரையும் போலீஸார் பிடித்து, காருடன் மத்திய பாகம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். எஸ்.பி.அஸ் வின் கோட்னீஸ், ஏ.எஸ்.பி. செல்வ நாகரத்தினம் ஆகியோர் அங்கு வந்து, மூவரிடமும் விசாரணை நடத்தினர். அவை ஹெராயின் போதைப்பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது. தலா ஒரு கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் மொத்தம் 5 கிலோ ஹெராயின் இருந்தது. காரில் இருந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து தூத்துக்குடி எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் கூறியதாவது:

காரில் இருந்த தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த அகஸ் டின் தேன்ராஜ் (49), கார் ஓட்டு நரான திருச்சி பெரிய மிளகு பாறையைச் சேர்ந்த மூர்த்தி மகன் சதீஷ் (30), அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் குமார் (33) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெராயின் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

அகஸ்டின் தேன்ராஜ் சென்னை யில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஹெராயின் பாக்கெட்டுகளுடன், ஆம்னி பேருந்து மூலம் திருச்சி வந்துள்ளார். அங்கிருந்து வாடகை கார் பிடித்து, தூத்துக்குடிக்கு வந்த போது போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார். பறிமுதல் செய்யப் பட்ட போதைப் பொருளின் சர்வ தேச மதிப்பு ரூ.5 கோடி. தூத்துக் குடி துறைமுகம் வழியாக வெளி நாட்டுக்கு கடத்த முயன்றார்களா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். எந்தவித ரகசிய தகவலும் இன்றி போதை கும்பலை போலீஸார் பிடித்துள்ளனர். இதற் காக அவர்களைப் பாராட்டுகிறேன்’’ என்றார் அவர்.

கடத்தல் கும்ப லைப் பிடித்த போலீஸாருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in