

எடப்பாடி பழனிசாமி முதல்வ ராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அதிமுக எம்எல்ஏக்கள், நிகழ்ச்சி முடிந் ததும் மீண்டும் கூவத்தூர் விடு திக்கு திரும்பினர். இதனால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த 8-ம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் தனியார் சொகுசு விடுதி யில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா நேற்று முன்தினம் சிறை சென்றதால், அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி நேற்று முதல்வராக பதவியேற்றார்.
பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, கடந்த 8 நாட்களாக கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், கூவத்தூரில் கடந்த ஒரு வாரமாக காணப்பட்ட பரபரப்பு ஓய்ந்து அமைதி நிலவியது.
எனினும், பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு அதிமுக எம்எல்ஏக் கள் மீண்டும் நேற்று இரவே கூவத்தூர் தனியார் சொகுசு விடுதிக்கு திரும்பினர். இதனால், கூவத்தூர் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விடுதிக்கு முதல்வர் பழனி சாமி வரக்கூடும் என்பதால் முதல் வரின் பாதுகாப்புக்காக நியமிக் கப்பட்டுள்ள போலீஸார், விடுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை ஆய்வு நடத்தினார். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.