Published : 15 Sep 2016 09:00 AM
Last Updated : 15 Sep 2016 09:00 AM

பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது: கவுன்ட்டர்களில் காத்திருப்போருக்கு நேரம் ஒதுக்கப்படுமா?

பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. கவுன்ட்டர்களில் காத்திருந்தவர்கள் ஏமாற்ற மடைந்தனர்.

பயணிகளின் வசதிக்காக 4 மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படு கிறது. பொங்கல் பண்டிகை, வரும் ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல் 16 வரை கொண்டாடப்படுகிறது. ஜன. 12-ம் தேதி புறப்படும் ரயிலுக்கு நேற்றும், ஜன. 13 போகியன்று புறப்படும் ரயிலுக்கு இன்றும், ஜன. 14 பொங்கலன்று புறப்படும் ரயிலுக்கு நாளையும் முன்பதிவு செய்யலாம். இதேபோல், பொங்கல் முடிந்து சென்னை திரும்புவதற்கான முன்பதிவு இம் மாதம் 18-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், வரும் ஜன. 12-க் கான விரைவு ரயில்களுக்கான முன் பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அடுத்த சில நிமிடங் களிலேயே நெல்லை, பாண்டியன், பொதிகை, அனந்தபுரி, வைகை, திருச்செந்தூர், மன்னை உள்ளிட்ட விரைவு ரயில்களுக்கா‌ன டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. காத் திருப்போர் பட்டியல் 50 முதல் 257 வரையில் நீடித்து இருந்தது. இதனால் சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட ரயில் நிலை யங்களில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதா வது: பெரும்பாலானவர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்வதால் அவர்களுக்கு எளிமையாக முன்பதிவு வசதி கிடைக்கிறது. தீபாவளி, பொங்கல் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். அனைத்து விரைவு ரயில்களிலும் பொங்கலை முன்னிட்டு ஜன.12-க்கான முன் பதிவு முடிந்துவிட்டது. ஜன. 11-ம் தேதியில் பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் காலியாகத்தான் இருக்கின்றன. தற்போது, 65 சதவீதம் பேர் இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். தற்போது, ஒரு நிமிடத்துக்கு 15 ஆயிரம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக ரயில் பயணிகள் கூறியதாவது:

இணையதள டிக்கெட் முன்பதிவு அதிகரித்ததால், கவுன்ட் டர்களில் காத்திருப்போருக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. ஒரே நேரத்தில் இணையதளத்திலும், கவுன்ட்டர்களிலும் முன்பதிவு தொடங்குவதால் அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் தீர்ந்துவிடுகிறது. கவுன்டர்களில் வந்து டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றமடைகின்றனர். எனவே, கவுன்ட்டர் திறந்து அடுத்த 10 நிமிடங்களுக்குப் பிறகு, இணையதள முன்பதிவு தொடங்கினால், கவுன்டர்களில் காத்திருப்பவர்களும் பயனடை யலாம். சாஃப்ட்வேரில் தில்லு முல்லு செய்து முறைகேடுகளில் ஈடுபட்டு, அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் சில டிராவல் ஏஜென்டுகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x