

மாமல்லபுரம் அடுத்த மணமை அருகே சாலையோரத்தில் தீப் பிடித்து எரிந்த காரில் சிக்கி 2 பெண் கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். உடல் கருகி உருக்குலைந்து இருந்த தால் அவர்கள் யார் என அடை யாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், உயிரிழந்த மூவரும் குரோம்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மாமல்லபுரம் அடுத்த மணமை அருகேயுள்ள வி.எஸ்.பி.நகர் பகுதி யில் சாலையோரத்தில் நேற்று முன் தினம் இரவு கார் ஒன்று மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த மாமல்லபுரம் போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். பின்னர், காரின் உள்ளே பார்த்தபோது ஒரு ஆண், 2 பெண்களின் உடல்கள் கருகிய நிலையில் இருந்தன. அடையாளம் தெரியாத அளவுக்கு தீயில் உருக்குலைந்து போய் இருந்தது. இதனால் அவர்கள் யார் என்பது குறித்தும் கார் தீப்பிடித்ததற்கு என்ன காரணம் என்பது குறித்தும் உடனடியாகத் தெரியவில்லை.
இதையடுத்து, போலீஸார் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்கள் யார், அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன்படி காரின் பதிவு எண்ணை வைத்து இறந்தவர் களை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சென்னை குரோம்பேட்டை அடுத்த கமலா நகரைச் சேர்ந்த ஜெயதேவன்(55). இவரது மனைவி ரமாதேவி(48) மற்றும் மகள் திவ்யஸ்ரீ(26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திவ்யஸ்ரீயின் கணவர் சரத்துக்கு சம்பவம் குறித்து போலீஸார் தகவல் தெரிவித்ததாக தெரிகிறது.
கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து போலீஸார் விசா ரணை செய்து வருகின்றனர். சுற்றுலா வந்தவர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றனரா அல்லது கார் திடீரென தீப்பிடித்து எரிய என்ன கார ணம். சதிவேலை ஏதும் இருக்குமா என்பது பற்றி விசாரிப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.