பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்: காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்: காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
Updated on
1 min read

டெங்கு உட்பட அனைத்து வகை யான காய்ச்சல்களை கட்டுப் படுத்த போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரி வித்தார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு பவர்களை அமைச்சர் விஜயபாஸ் கர் நேற்று பார்வையிட்டார். பின்னர் எழும்பூர் குழந்தைகள் நல மருத் துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகள், சிறுவர்களையும் பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து நிருபர்களி டம் அமைச்சர் கூறியதாவது:

டெங்கு காய்ச்சல் உட்பட அனைத்து வகையான காய்ச்சல் கள், தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்தவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் தேவையான ஏற்பாடுகள் போர்க்கால அடிப் படையில் செய்யப்பட்டு வருகின் றன. திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக மக்கள் மனதில் பீதியை ஒருசாரார் ஏற்படுத்தி வருகின்றனர். டெங்கு வந்தாலே உயிரிழப்பு நேரிடும் என்பது தவறான கருத்தாகும். உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்கத் தவறிய, ஒரு சதவீதத்துக்கு குறைவான அசாதாரண நிகழ்வுகளில் மட்டுமே உயிரிழப்பு நேரிட வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சலை எளிதில் குணப்படுத்த முடியும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் நில வேம்பு குடிநீர் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச மாக வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் எவ்வித பதற்றமோ, பீதியோ அடையாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருந்து கடைகளுக்கு சென்று தாமா கவே மருந்து வாங்கி உட்கொள் வதை முற்றிலும் நிறுத்த வேண்டும். தகுதியற்ற, போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும் தவிர்க்க வேண்டும்.

திருவள்ளூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள சுமார் 100 சிறுவர்கள் காய்ச்சலுக் காக எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை அரசு பொது மருத் துவமனையில் உயிரிழந்த சீனி வாசன் என்ற சிறுவனுக்கு டெங்கு இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

திருவள்ளூரில் 6 போலி டாக்டர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். டாக்டரின் சீட்டு இல்லாமல் மருந்துகளை கொடுத்த 6 மருந்துக் கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி டாக்டர்களை பிடிக்க மாவட்டம் தோறும் தனிக்குழு அமைக்கப் பட்டுள்ளது. ஒரு பகுதியில் 3 பேருக்குமேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அங்கு மருத் துவக் குழு அமைக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) ஆர்.விமலா ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in