தமிழகம் முழுவதும் ரூ.63 கோடியில் முடிக்கப்பட்ட புதிய திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கிவைத்தார்

தமிழகம் முழுவதும் ரூ.63 கோடியில் முடிக்கப்பட்ட புதிய திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கிவைத்தார்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் ரூ.62 கோடியே 83 லட்சம் மதிப்பிலான குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட திட்டப் பணிகளை முதல்வர் எடப் பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.37 கோடியே 32 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிக் கப்பட்டுள்ளன. இதை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும், நாமக்கல்லில் குடிநீர் அபிவிருத்தி திட்டம், சென்னை மாநகராட்சி பள்ளி களில் கூடுதல் வகுப்பறை கள், ஆரம்ப சுகாதார மையங் களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

நகராட்சி நிர்வாகத்துறை

நகராட்சி நிர்வாகத்துறை சார் பில் திருச்சி மாவட்டம் மணப் பாறையில் புதிய பேருந்து நிலையம், திண்டுக்கல்லில் உயிரி எரிவாயு கலன், கூடலூரில் வீடற்றவர்களுக்கு இரவு தங்கும் விடுதி, பேரூராட்சி நிர்வாகத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் துப்புரவு குடியிருப்பு வளாகம், நவீன எரிவாயு தகன மேடைகள், மேல்நிலை குடிநீர் தொட்டிகள், அலுவலக கட்டிடங்கள், வாரச் சந்தை கடைகள் என ரூ.61 கோடியே 67 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் புதுக்கோட்டை காட்டுபுதுக்குப்பத்தில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் ரூ.ஒரு கோடியே 16 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடத்தையும் முதல்வர் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, வி.சரோஜா, பி.பாலகிருஷ்ணா ரெட்டி, தலை மைச் செயலாளர் கிரிஜா வைத் தியநாதன், துறை செயலாளர்கள் ஹர்மந்தர் சிங் (நகராட்சி நிர்வாகம்), கே.மணிவாசன் (சமூக நலத்துறை), முகமது நசிமுத்தின் (மாற்றுத்திறனாளிகள் நலன்), சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் தீரஜ்குமார் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in