

மின்வாரியத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள 375 உதவிப் பொறியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இம்மாதம் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கான இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, வண்டலூர் மிருகக் காட்சி சாலை, கிரசென்ட் பொறியியல் கல்லூரி அருகில் 247, ஜிஎஸ்டி சாலையில் உள்ள கல்யாண் ஹோம்டெல் என்ற ஓட்டலில் நடைபெறும்.
இதுகுறித்து கூடுதல் விவரங்கள் அறிய 044-66289999 என்ற தொலைபேசி எண்ணிலும், 7401815451, 7358054372, 9445857197 என்ற மொபைல் எண்களிலும் தொடர்பு கொண்டு அறியலாம்.
மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.