தேமுதிக, மதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

தேமுதிக, மதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்
Updated on
1 min read

கோவை, திருநெல்வேலி மாவட்டங் களைச் சேர்ந்த தேமுதிக மற்றும் மதிமுக நிர்வாகிகள் நேற்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தாங்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்தன. அதனைத் தொடர்ந்து தேமுதிக, மதிமுகவைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தங்கள் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்து வருகின்றனர்.

ஸ்டாலின் முன்னிலையில்..

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஒன்றிய தேமுதிக செயலாளர் எம்.கண்ணன், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் எஸ்.மணிகண்டன், விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலாளர் பீட்டர் சாமிநாதன், கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றிய தேமுதிக பொருளாளர் டி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 100-க்கும் அதிகமான தேமுதிக நிர்வாகிகள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி ஒன்றிய மதிமுக செயலாளர் இரா.சங்கரபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.சாலமன்டேவிட். விக்கிரசிங்கபுரம் நகரச் செயலாளர் எம்.குட்டிகணேசன், கோவை மாவட்டம் மைலேரி பாளையம் ஜெ.பேரவை தலைவர் திருமூர்த்தி, மதிமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் மா.உமாபதி உள்ளிட்ட 100-க்கும் அதிமானோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in