சகோதரத்துவம் தழைத்திட உறுதியேற்போம்: ஜெயலலிதா மீலாதுன் நபி வாழ்த்து

சகோதரத்துவம் தழைத்திட உறுதியேற்போம்: ஜெயலலிதா மீலாதுன் நபி வாழ்த்து
Updated on
1 min read

நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் உறுதியேற்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா மீலாதுன் நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழத்துச் செய்தியில்: அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நன்நாளை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் "மீலாதுன் நபி" என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இத்திருநாளில், இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மையை பேசுதல், தூய எண்ணத்தோடு வாழ்தல், ஏழை எளியோருக்கு உதவி புரிதல், அனைவரிடத்தும் அன்புடனும், நற்பண்புடனும் பழகுதல், புகழையும் அறத்தையும் தராத செயல்களை செய்யாதிருத்தல் என்பது இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு நல்கிய போதனைகள் ஆகும்.

அன்பு இருந்தால் தான் பிறர்க்கு நாம் உதவ முடியும் என்பதனை உறுதியாக நம்பி அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம், தழைத்தோங்கிடவும் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம்.

இப்புனித மிக்க பொன்னாளில், இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய "மீலாதுன் நபி" நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in