சொத்து வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சொத்து வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
Updated on
1 min read

நடப்பு நிதியாண்டின் 2-வது அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தாவிட்டால், ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி முனிசி பல் சட்டம் 1919-ன்படி, நடப்பு நிதியாண்டின் (2016-17) இரண் டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள், அதா வது கடந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் 15-ம் தேதிக்குள் செலுத்தி யிருக்க வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்கள் உடனடியாக சொத்து வரியை செலுத்தி, ஜப்தி நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சொத்து வரியை, காசோலை அல்லது கேட்பு காசோலை மூலமாக ‘வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி’ என்ற பெயரில் http://www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலமாக செலுத்தலாம். சென்னை மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐடிபிஐ வங்கி, கனரா வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கோடெக் மஹிந்திரா வங்கி, லஷ்மிவிலாஸ், எஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி ஆகியவற்றில் பணமாகவும் செலுத்தலாம். மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்களிலும் செலுத்தலாம். சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு மாநகராட்சியின் 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in