Published : 05 Jul 2016 07:41 AM
Last Updated : 05 Jul 2016 07:41 AM

மழைக் காலங்களில் அவதிப்படும் லட்சக்கணக்கான மக்கள்: அடையாற்றின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கப்படுமா? - தலைமை செயலாளரை சந்திக்க திமுக எல்எல்ஏ திட்டம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி தொடங்கிய, வரலாறு காணாத கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் வௌ்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக சைதாப்பேட்டை அடையாறு கரை யோர பகுதிகளான முத்துரங்கம் பிளாக், ஜோதி ராமலிங்கம் நகர், பாரதி நகர், சாரதி நகர், ஜோதி தோட்டம், ஜோதியம்மாள் நகர், நெருப்பு மேடு, ராகரெட்டி தோட்டம், செட்டி தோட்டம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குதான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மறைமலை அடிகள் மேம்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இனியும் வெள்ளப் பெருக்கின் போது பாதிக்கப்படாமல் இருக்க அடையாற்றை தூர்வாரி, இருபுற மும் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இது தொடர்பாக சைதாப் பேட்டை முத்துரங்கம் பிளாக் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் கூறும்போது, ‘‘கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் நாங்கள் அவதிப்பட்டது மறக்க முடியாத சம்பவமாகும். ரயில் நிலையங்களிலும், ரயில் பெட்டி களிலும் 5 நாட்கள் குடும்பத்தோடு குடியேறி, குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் அவதியுற்றோம். அவசரத்துக்கு கூட ஒதுங்க முடியாமல் நடைமேடைகளில் தவித்தோம். ஒரு வாரத்துக்குப் பிறகு எங்கள் வீட்டுக்கு சென்றால் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தது. மீண்டும் புதிய வாழ்க்கையை தொடங்கியது போல்தான் உணர்ந்தோம். எனவே அடையாற்றை தூர்வாரி, இரு புறமும் சுவர் அமைக்க வேண்டும். இதுதான் எங்கள் தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது’’ என்று கூறினர்.

இது தொடர்பாக சைதாப் பேட்டை தொகுதி எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

சென்னையில் மொத்தம் 6 தொகுதிகள் வழியாக அடையாறு சென்றாலும், சைதாப்பேட்டை தொகுதியில்தான் நீண்டதூரம் செல் கிறது. கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கின்போது இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை இப் பகுதி மக்கள் யாரும் மறக்க மாட் டார்கள். அவர்களின் இயல்பு வாழ்க் கை முடங்கியது. சிறுக, சிறுக சேர்த்து வைத்த ஒட்டுமொத்த பொருட்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

எனவே, இனியும் வெள்ளப் பெருக்கின் போது மக்கள் பாதிக்கா தவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையாற்றில் ஏற்கெனவே பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக தேங்கியுள்ளன. எனவே, குறைந்தபட்சம் 3 முறையாவது தூர்வார வேண்டும். அடுத்தது அடையாற்றின் இருபுறமும் சுமார் 8 அடி உயரத்துக்கு கான்கிரீட் சுவர்கள் எழுப்ப வேaண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த ஓரிரு நாட்களில் தலைமை செயலாளரை நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளோம். பிறகு, பொதுப்பணித்துறை செயலாள ரையும் சந்தித்து மனு அளிக்கவுள் ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x