பிரபாகரனின் மகன்கள் சிலை திறப்பு? - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பரபரப்பு
தஞ்சாவூர் விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தனியாக பீடத்துடன் அமைக்கப்பட்டிருந்த சிற்பம் மூடப்ப ட்ட நிலையிலேயே இருந்தது.
இது பிரபாகரனின் சிலையாக இருக்குமோ என்று உளவுத்துறையினர், விசாரித்தபோதும் ஏற்பாட்டாளர்கள் அதுகுறித்த விவரத்தை ரகசியமாகவே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முற்றம் திறப்பு விழா நடந்த இரண்டாம் நாள் நவ.9-ம் தேதி எவ்வித அறிவிப்பும் இல்லாமல் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 10 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட ஒரே கல்லில் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, இளைய மகன் பாலச் சந்திரன் ஆகியோர் உயிருடன் இருப்பது போலவும் பின்னர் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சியும் வடிக்கப்பட்டுள்ளது.
தீக்குளித்து உயிரிழந்தவர்களின் சிற்பங்களுக்கும், போரில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் துயரக் காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்களுக்கும் கீழே பெயர்கள், விவரங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிரபாகரனின் மகன்களின் சிலைகள் குறித்த எந்தக் குறிப்புகளும் எழுதி வைக்கப்படவில்லை.
