எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு அறிவிப்பு

எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு அறிவிப்பு
Updated on
1 min read

அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

செப்டம்பர், அக்டோபர் மாதத் தில் நடைபெற உள்ள எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த கடைசி தேதிக்குள் ஆன்லைனில் விண் ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்களிடம் இருந்து சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்துக்கு செப்டம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், கடலூர் மற்றும் சென்னை ஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத்தில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு களை இணையதளத்தில் பதி விறக்கம் செய்துகொள்ள வேண் டும். இதுகுறித்து பின்னர் அறிவிக் கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in