

ராஜஸ்தான் மாநிலத்தில் வேளாண் தொழில்களை தொடங்க வருமாறு தமிழக தொழிலதிபர்களுக்கு அம்மாநில அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் சர்வதேச ராஜஸ்தான் வேளாண் தொழில்நுட்ப மாநாடு நவம்பர் 9 முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாடு பற்றிய முன்னோட்டம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு ராஜஸ்தான் மாநில அரசும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும் (பிக்கி) இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச் சர் ராஜேந்திர ரத்தோர் பேசிய தாவது:
ராஜஸ்தான் மாநில மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கி னர் விவசாயிகள்தான். மாநிலத் தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு 31 சத வீதம் ஆகும். விவசாயம் மற்றும் அதுசார்ந்த தொழில்களைத் தொடங்குவதற்கு ராஜஸ்தான் ஏற்ற இடமாக உள்ளது. தொழில் தொடங்க வருவோருக்கு ஒற்றைச் சாளர முறையில் உடனடியாக அனுமதி அளிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி பல்வேறு சலுகை களும் வழங்கப்படுகின்றன. தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலமாக ராஜஸ்தான் திகழ்கிறது.
ராஜஸ்தான் அரசு சார்பில் சர்வ தேச ராஜஸ்தான் தொழில்நுட்ப மாநாடு தலைநகர் ஜெய்ப்பூரில் நவம்பர் 9-ம் தேதி தொடங்கி 11 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப முறைகளை அறிந்துகொள்ள இந்த மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொள்கிறார்கள். ராஜஸ் தானில் வேளாண் மற்று்ம் அதுசார்ந்த தொழில்கள் தொடங்க வருமாறு தமிழக தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுக் கிறேன். தொழில்முனைவோருக்கு தேவையான அனைத்து வசதி களையும் செய்துகொடுக்க மாநில அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை துறையின் முதன்மைச் செயலாளர் நீல்கமல் தர்பாரி தொழில் முனைவோருக்கு அரசு அளிக்கும் பல்வேறு சலுகைகளையும், வசதி வாய்ப்புகளையும் எடுத்துரைத் தார். இந்த நிகழ்ச்சியில் பிக்கி அமைப்பின் தமிழ்நாடு தலைவர் ரபீக் அகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.