அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் ஜெயலலிதா திடீர் பிரச்சாரம்

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் ஜெயலலிதா திடீர் பிரச்சாரம்
Updated on
2 min read

16 தொகுதிகளிலும் வாக்கு சேகரித்தார்

முதல்வர் ஜெயலலிதா, சென் னையில் நேற்று திடீரென வேனில் சென்று பிரச்சாரம் செய்தார். 16 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா கடந்த ஏப்ரல் 9-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கினார். சென்னை தீவுத் திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் மாவட்ட தொகுதிகளைச் சேர்ந்த வேட் பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். அதைத் தொடர்ந்து விருத்தாசலம், மதுரை, தஞ்சை, கோவை என 14 இடங் களில் அவர் பிரச்சாரம் செய் தார். பெருந்துறையில் அதிமுக வின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.

கடந்த 6-ம் தேதி, தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் வேனில் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். நேற்று முன்தினம் அரக்கோணத்தில் வேலூர், திரு வண்ணாமலை மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். நாளை 12-ம் தேதி நெல்லை மாவட் டத்தில் பிரச்சாரத்தை அவர் நிறைவு செய்வதாக அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று திடீரென சென்னையில் உள்ள தொகுதிகளில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து பிரச்சார வேனில் ஜெய லலிதா புறப்பட்டார். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, நடேசன் சாலை வழியாக சென்று ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் அருகே சேப்பாக்கம் - திருவல் லிக்கேணி தொகுதி வேட்பாளர் நூர்ஜகானை ஆதரித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து சூளை தபால் நிலையம் (எழும்பூர் தொகுதி), யானைகவுனி மேம்பாலம் வால்டாக்ஸ் சாலை சந்திப்பு (துறைமுகம்), மூல கொத்தளம் (ராயபுரம்), சத்திய மூர்த்தி நகர் (பெரம்பூர்), ஓட்டேரி (திருவிக நகர்), அய னாவரம் பேருந்து நிலையம் (கொளத்தூர்), ரெட்டி தெரு (வில்லிவாக்கம்), கோயம்பேடு (விருகம்பாக்கம்), எம்எம்டிஏ காலனி (அண்ணா நகர்), புஷ்பா நகர் (ஆயிரம் விளக்கு), தி.நகர் பஸ் நிலையம் (தி.நகர்), பனகல் மாளிகை (சைதாப்பேட்டை), கத்திப்பாரா சந்திப்பு (ஆலந்தூர்), அடை யாறு மலர் மருத்துவமனை (வேளச்சேரி), மயிலை மாங் கொல்லை (மயிலாப்பூர்) ஆகிய இடங்களில் வேனில் இருந்த படியே அந்தந்த தொகுதி வேட் பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி வேட்பாளர் நூர்ஜகானை ஆதரித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் சந்திப்பில் வாக்கு சேகரித்த ஜெயலலிதா, ‘‘கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசு உங்கள் வாழ்வில் வசந்தத்தை கொடுத்துள்ளது. அந்த வசந்தம் தொடர்ந்திட, தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடர, ஏழை எளியோர் தொடர்ந்து ஏற்றம் பெற்றிட, தமிழகம் வளம் பெற்றிட வரும் 16-ம் தேதி நடக்கும் சட்டப்பேரவைத் தேர் தலில் அதிமுக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்றார்.

மாலை 6.40 மணிக்கு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு போயஸ் தோட்டம் திரும்பினார். முதல்வர் ஜெயலலிதா சென்ற பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். பாளையங்கோட்டையில் இன்று நடக்கும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் நெல்லை, தூத்துக் குடி, கன்னியாகுமரி மாவட்டங் களைச் சேர்ந்த 20 தொகுதி வேட்பாளர்களை அறிமுகப் படுத்தி வாக்கு சேகரிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in