Published : 13 Mar 2017 08:23 AM
Last Updated : 13 Mar 2017 08:23 AM

பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 10 அம்ச திட்டங்களுக்கு முன்னுரிமை

பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை நேற்று வெளியிடப் பட்டது.

சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாமக நிழல் நிதிநிலை அறிக்கையை ராமதாஸ் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் இளை ஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் நிருபர் களிடம் ராமதாஸ் கூறியதாவது:

கடந்த 2003-04-ம் ஆண்டு முதல் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக வெளியிட்டு வருகிறது. தற்போது 15-வது ஆண்டாக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட் டுள்ளது. விவசாயம், புதிய பாசனத் திட்டங்களை செயல்படுத்துதல், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், நிர்வாகச் சீர்த்திருத்தம், அரசின் வருவாயை அதிகரித்தல், கடன் சுமையைக் குறைத்தல், பொதுத் துறை நிறுவனங்களை வலுப்படுத் துதல், தொழிலாளர் மற்றும் அரசு ஊழியர் நலன் காத்தல் ஆகிய 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நிழ்ல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத்துக்கு அனைத்தும் இலவசம். லோக் ஆயுக்தா அமைப்பு, அம்மா திட்டங்கள் பெயர் மாற்றம், வருவாயைப் பெருக்குவதற்கான பரிந்துரை களை வழங்க தனி ஆணையம், கடன்சுமை இல்லா தமிழகம் அமைக்க சிறப்புத் திட்டம், ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க தனிப்பிரிவு. ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என 89 தலைப்புகளில் நிழல் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு ரூ.500, ரூ.1,000 கொடுத்தார்கள். இந்த இடைத்தேர்தலில் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் கொடுப்பார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி யிடுவது குறித்து நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். பொதுவாக இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவதில்லை.

சென்னை மெட்ரோ ரயில் களில் திருக்குறள் மறைக்கப்பட்டு, பன்னாட்டு குளிர்பான விளம்பரங் கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் கள் வருகிறது. இதைக் கண்டித்து பாமக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x