திமுகவின் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை: வைகோ

திமுகவின் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை: வைகோ
Updated on
2 min read

தன் மீது சுமத்தப்பட்ட தேச விரோத வழக்கில் தானாக முன்வந்து சரணடைந்து சிறைக்கு சென்ற வைகோவின் நீதிமன்ற காவல் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிறைக்கு செல்லும் முன்பாக, விவசாயிகளுக்காக திமுக முன்னெடுத்து நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என வைகோ தெரிவித்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் நடைபெற்ற ‘‘ நான் குற்றம் சாட்டுகிறேன்’’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ மீது விடுதலைப் புலி களுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக தேச விரோத வழக்கு போடப்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு, மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்படாமல் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலேயே கிடப்பில் கிடந்தது. இதனால் இந்த வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி வைகோ கடந்த ஏப்ரல் 3-ம் தேதி தானாக முன்வந்து சரணடைந்தார். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்றோடு அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து அவர் நேற்று காலை 14-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வைகோ சார்பில் ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்யப் படவில்லை. இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை வரும் ஏப்ரல் 27-ம் தேதி வரை நீட்டித்தும், இந்த வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றியும் குற்றவியல் நடுவர் கோபிநாத் உத்தரவிட்டார்.

சிறைக்கு செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘‘விவசாயிகள் போராட் டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது நல்ல தல்ல. மோடி கார்ப்பரேட்களின் ஏஜென்ட் என்பதை ஏற்கெனவே நேரடியாகவே சொல்லியிருக் கிறேன். மேகேதாட்டு அணை கட்டும் விஷயத்தில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு சாதகமாகவும், தமிழகத்துக்கு பாதகமாகவும் செயல்படுகிறது. மேகேதாட்டுவில் அணை கட்டினால் ஒருமைப்பாடு என்னும் அணை உடையும். நதிநீர் இணைப்புக்காக முதன் முதலில் குரல் கொடுத்தவன் நான்தான்.

தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் உன்னத பணியில் மதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் காஸ் என விவசாயிகளுக்கு எதிரான அனைத்து திட்டங்களை யும் மத்திய அரசு செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க மாட் டோம். ஆட்சியில் இருந்த போது தமிழகத்துக்கு பல்வேறு துரோகங்களை செய்த திமுக இப்போது விவசாயிகளின் பெயரில் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத் துள்ளது. அவர்களால் எல்லோரை யும் ஏமாற்ற முடியாது. இந்தப் போராட்டத்துக்கு மதிமுக சார்பில் ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. திருப்பூரில் மதுவுக்கு எதிராக போராடிய பெண்ணை தாக்கிய காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in