

தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளின் பிராந்தியச் செயலாளராக பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர் மோகன் காமேஸ்வரனுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளின் பிராந்தியச் செயலாளர் பொறுப்புக்கு சர்வதேச ஓடோலாஜிக்கல் சமூகங்களின் கூட்டமைப்பினால், தமிழகத்தில் இருந்து முதல்முறையாக காது-மூக்கு-தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இதன் மூலம் இந்திய மருத்துவர்களுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.