

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை தமிழகம் முழு வதும் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுதினர். பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறு கிறது. இதில் 5 லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள்.
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு திட்டமிட்டபடி ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி, செப்டம்பர்) நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு (தாள்-1) நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 598 மையங் களில் 2 லட்சத்து 25 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் தேர் வெழுதினர். தேர்வுக்கு அனுமதிக் கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் கலந்துகொண்டனர்.
ஆள்மாறாட்டம், காப்பி அடித் தல் உள்ளிட்ட முறைகேடுகள் நடக் காமல் தடுக்கும் வகையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் தலை மையில் பறக்கும் படைகள் அமைக் கப்பட்டன. பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தேர்வு காலை 10 மணிக்குத் தான் என்ற போதிலும் ஏற் கெனவே அறிவுறுத்தப்பட்டபடி விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வந்துவிட்டனர். காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை பரி சோதனை நடந்தது. செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுசெல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் பேக் உள்ளிட்ட உடைமைகள் வாங்கி வைக்கப்பட்டு அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. பெரும்பாலான விண்ணப்பதாரர் கள் கணவன், மனைவி, பிள் ளைகள், பெற்றோர் என குடும்பத்தோடு வந்ததை பல மையங்களில் காண முடிந்தது.
சென்னையில் சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தி யன் மேல்நிலைப்பள்ளி, ரோசரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, விருகம்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 27 மையங்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரி யர்கள் தேர்வெழுதினர். அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத் தில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச் செல்வன் ஆய்வு மேற்கொண்டார். ஆசிரியர் தகுதித்தேர்வின் சென்னை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான ஆர்எம்எஸ்ஏ திட்ட இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அசோக்நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களில் ஆய்வு நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், “சென்னையில் தேர்வெழுத 10 ஆயிரத்து 147 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 9 ஆயிரத்து 657 பேர் தேர்வெழுதினர். எஞ்சிய 490 பேர் தேர்வில்கலந்து கொள்ளவில்லை. வருகைப்பதிவு 95 சதவீதம்” என்று தெரிவித்தார்.
இடைநிலை ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வைத் தொடர்ந்து, பட்டதாரி ஆசிரி யர்களுக்கான தகுதித்தேர்வு (தாள்-2) தமிழகம் முழுவதும் 1,263 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடை பெறுகிறது. தேர்வெழுத 5 லட்சத்துக்கு 2 ஆயிரம் பேர் அனு மதிக்கப்பட்டுள்ளனர். சென்னை யில் 88 மையங்களில் 31 ஆயிரம் பேர் தேர்வெழுதுகிறார்கள்.