ஆளுநர் ரோசய்யா 83-வது பிறந்த தினம்: முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் வாழ்த்து

ஆளுநர் ரோசய்யா 83-வது பிறந்த தினம்: முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் வாழ்த்து
Updated on
1 min read

ஆளுநர் கே.ரோசய்யாவின் 83-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் நேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தனது 83-வது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினார். இதை முன்னிட்டு நேற்று காலை அவர், தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் மனைவி கே.சிவலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

ஆளுநர் பிறந்த தினத்தை முன் னிட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அதில், ‘‘இந்த சந் தோஷமான தருணத்தில் 83-வது பிறந்த தினத்தை கொண்டாடும் உங்க ளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள் கிறேன். இன்னும் பல்லாண்டுகள் சிறந்த ஆரோக்கியத்துடன், அமைதி யுடன் நாட்டுக்கும் மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆளுநர் ரோசய்யாவை தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். அதற்கு ஆளுநர் ரோசய்யாவும் நன்றி தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த், சிக்கிம் ஆளுநர் ஸ்ரீநிவாஸ் தாதாசாகிப் பட்டீல் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். ஜார்க்கண்ட் ஆளுநர் திரவுபதி முர்மு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், ஆந்திர சட்டப்பேரவை துணைத் தலைவர் மண்டலி புத்த பிரசாத், நல்லி குப்புசாமி, பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், ஆளுநரின் செயலர் ரமேஷ் சந்த்மீனா, ராஜ் பவன் அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆளுநருக்கு வாழ்த்து தெரி வித்தனர். அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் வாழ்த்து தெரிவித்த துடன், ஓவியத்தையும் பரிசளித்தனர். இது தவிர பல்வேறு பள்ளி மாண வர்கள் ஆளுநர் கே.ரோசய்யாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in