

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 24, 26, 30, 31-ம் தேதிகளில் மற்றும் செப்டம்பர் 3, 6, 9, 10, 12, 13, 17-ம் தேதிகளில் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளன. இதனால், பறக்கும் ரயில் சேவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்ல வேண்டிய பறக்கும் மின்சார ரயில் 10 நிமிடங்கள் கால தாமதமாக புறப்பட்டுச் செல்லும். இதேபோல், வேளச்சேரியில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்ல வேண்டிய பறக்கும் மின்சார ரயில் 10 நிமிடங்கள் கால தாமதமாக புறப்பட்டுச் செல்லும்.