

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை ஆளுநர் கலைக்க வாய்ப்பு உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான மணிசங்கர் அய்யர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் தற்போது மாபெரும் குழப்பம் நிலவிவருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை மாறிக்கொண்டே வருகிறது.
அதிமுக ஆட்சி அடுத்த நான் காண்டு காலம் நீடிக்கும் என நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், ஜெயலலிதா இறந்த பிறகு அந்தக் கட்சியிலும், ஆட்சி யிலும் மிகுந்த குழப்பம் நீடித்து வருகிறது. அதனால், ஆட்சியை ஆளுநர் கலைத்துவிட்டு சட்டப் பேரவைத் தேர்தலை மீண்டும் நடத்த வாய்ப்பு உள்ளது.
வரும் ஜூலை மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அடுத்து 2019-ல் மக்களவைத் தேர்தல் வருகிறது. மத்தியில் எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அடுத்த ஆண்டிலேயே மக்களவைத் தேர்தலை பிரதமர் மோடி நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.