

மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்ட தற்கு இலங்கை மீனவர் சங்கத் தலைவர்கள் தொலைபேசி மூலம் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ள னர்.
இலங்கை மன்னார் மீனவர் சங்கத் தலைவர் ஜஸ்டின் சொய்ஷா கூறியதாவது: “இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கை வட பகுதி மீனவ மக்கள் சார்பில் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். இலங்கை சார்பில் நாங்கள் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
இதே கருத்தை யாழ்ப்பாணம் வடமராச்சி மீனவர் சங்கத் தலை வர் மகேசும் தெரிவித்தார்.