108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணி: ஜூன் 4-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணி: ஜூன் 4-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
Updated on
1 min read

108 ஆம்புலன்ஸ் சேவையின் மேலாளர் பி.பிரபுதாஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

108 ஆம்புலன்ஸ் சேவைக் கான ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத் துவ உதவியாளர் பணியிடங் களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர், சேலம், கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, கன்னியா குமரியில் ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.

ஓட்டுநர் பணியிடத்துக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற் றிருப்பதுடன், நேர்முகத் தேர்வு அன்று 23 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 162.5 செ.மீ.-க்கு குறையாமல், 3 ஆண்டு அனு பவம், இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ உதவியாளர் பணி யிடத்துக்கு பிஎஸ்சி நர்சிங், விலங்கியல், உயிர் வேதியியல் உள்ளிட்ட படிப்புகளை பயின் றிருக்க வேண்டும் (அ) சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை அறிய விரும்பு வோர் 044-28888060, 044-28888075, 044-28888077 ஆகிய தொலைபேசி எண்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in