

பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதற் காக அவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் மென்திறன் பயிற்சி அளிக்கும் வகையில் இன்போசிஸ் நிறுவனத்துடன் அண்ணா பல் கலைக்கழகம் ஒப்பந்தம் செய் துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத் தின் ஓர் அங்கமான பல்கலைக்கழக தொழில் கூட்டுமுயற்சி மையம் சென்னையை அடுத்த மகேந்திரா சிட்டியில் உள்ள இன்போசிஸ் மேம்பாட்டு மையத்துடன் அண் மையில் ஓர் ஒப்பந்தம் செய்துள் ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் கல்வி மற்றும் பயிற்சி மதிப்பீட்டுப் பிரிவின் இணை துணைத்தலைவர் பி.சுரேஷ் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் எஸ்.கணேசன் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழகத் தின் 13 பல்கலைக்கழக கல்லூரி கள், 3 மண்டல மையங்கள் மற்றும் 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்ற மாண வர்கள், ஆசிரியர்கள் பயன்பெற இந்த ஒப்பந்தம் வகை செய்யும். ஆசிரியர் மேம்பாடு, மாணவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் மென்திறன் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்கம், தொழில்நிறுவனங்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாணவர்களை தயார் படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகள் அமலில் இருக்கும். இதன்மூலம் 500 மாணவர்களுக்கும், 100 ஆசிரி யர்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியானது புதிதாக தொடங்கப்படும் நிறு வனங்கள் (ஸ்டார்ட் அப்ஸ்) மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும். ஆசிரியர்களுக்கு தகவல் தொழில் நுட்ப மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தொழில்நிறுவனம் சார்ந்த புராஜெக்ட் பணிகளை இலவசமாக மேற்கொள்ளவும், இன்போசிஸ் நிறுவன பயிற்சிகளை இலவசமாக பெற்றிடவும் இன்போசிஸ் வளா கங்களை பார்வையிடவும் இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவும் என்று பல்கலைக்கழக தொழில் கூட்டுமுயற்சி மைய இயக்குநர் டி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம் 2 ஆண்டுகள் அமலில் இருக்கும். இதன்மூலம் 500 மாணவர்களுக்கும், 100 ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.