பாலாறு தடுப்பணை விவகாரம்: சட்டப்பேரவை முன் போராட்டம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

பாலாறு தடுப்பணை விவகாரம்: சட்டப்பேரவை முன் போராட்டம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
Updated on
1 min read

பாலாற்றின் தடுப்பணையை உயர்த்தும் பணி களை தடுத்து நிறுத்தாவிட்டால், சட்டப்பேரவை முன் வரும் 21-ம் தேதி தற்கொலை செய்துகொள் ளும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாகண்ணு கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் வக்கோட்டை அருகேயுள்ள நத்தமாடிப்பட்டியில், 1,300 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி அரசு தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நத்தமாடிப் பட்டி கிராமத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற, அய்யா கண்ணு, பின்னர் செய்தியாளர்க ளிடம் கூறியது:

விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தி, அங்கு தொழிற் பூங்கா அமைப்பதைக் கைவிட வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆகஸ்ட் 15-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் துக்கு கால்நடைகளுடன் சென்று, தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

தமிழகத்தின் நீராதாரத்தைப் பாதிக்கும் வகையில், பாலாற்றின் குறுக்கேயுள்ள தடுப்பணையின் உயரத்தை ஆந்திர அரசு அதிகரிப் பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த தவறினால், வரும் 21-ம் தேதி சட்டப் பேரவை முன் விவசாயிகள் தற் கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in