மோசடி நிதி நிறுவனங்களிடம் படித்தவர்கள்தான் அதிகம் ஏமாறுகின்றனர்: நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்

மோசடி நிதி நிறுவனங்களிடம் படித்தவர்கள்தான் அதிகம் ஏமாறுகின்றனர்: நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்
Updated on
2 min read

மோசடி நிதி நிறுவனங்களிடம், படித்தவர்கள்தான் அதிகளவில் ஏமாறுகின்றனர். மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்தால்தான் மோசடிகள் குறையும் என்று சென்னையில் நடந்த நிதிசேவை நுகர்வோர் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

நிதிசேவைகள் தொடர்பாக நுகர்வோருக்கு வழிகாட்டும் கருத் தரங்கம், குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமையியல் நடவடிக்கை குழு (சிஏஜி) சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது.

இதில் மும்பை மணிலைஃப் ஆன்லைன் செய்தி நிறுவனத்தின் துணை ஆசிரியர் யோகேஷ் சப்காலே கூறியதாவது:

பல தனியார் காப்பீட்டு நிறுவனங் கள், நிதி நிறுவனங்கள் உண் மைக்குப் புறம்பாக விளம்பரம் செய்து தங்களது பாலிசியை விற்கின்றன. ஒரு நிமிடத்தில் உங்கள் குடும்பத்துக்கு காப்பீடு என்கின்றனர். எங்காவது இது சாத் தியமாகுமா? மோசடி நிறுவனங் கள் முதலில் தமிழகத்தைதான் தேர்வு செய்கின்றன. தவிர, இது போல ஆசைகாட்டி ஏமாற்றும் நிதி நிறுவனங்களிடம், படித்தவர்கள் தான் முதலில் ஏமாறுகின்றனர்.

இந்தியாவில் பியர்ல்ஸ் நிறு வனம் ரூ.49 ஆயிரம் கோடி, ஜப் பான் லைஃப், க்யுஸ்ட் நெட் நிறு வனங்கள் தலா ரூ.5 ஆயிரம் கோடி, அக்ரி கோல்டு நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடி, ஸ்பீக் ஆஸ்க் நிறுவனம் ரூ.3,200 கோடி, சகாரா நிறுவனம் ரூ.75 ஆயிரம் கோடியை மோசடியாக சுருட்டியுள்ளன. மோசடி எம்எல்எம் நிறுவனங்களும், வங்கிகளும் போட்டி போட்டு மக்களை ஏமாற்றுகின்றன.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். அங்கு ஒரே ஒரு செல்போன் கோபுரம்தான் உள்ளது. அங்கிருந்து தினமும் மும்பைக்கு 3 ஆயிரம் மோசடி வங்கி அழைப்புகள் செல்கின்றன. யாரை நம்பி மக்கள் முதலீடு செய்கிறார்களோ, அவர்களே ஏமாற்றினால் மக்கள் எங்கே போவார்கள். முன்னாள் வங்கிகள் தாங்கள் சேகரித்த பழைய வாடிக்கையாளர்களின் தகவல் திரட்டை அழிப்பதே இல்லை. அங்கிருந்துதான் மோசடி ஆரம்பமாகிறது.

ஒரு தனியார் வங்கி, சேவை குறித்து அனுப்பும் குறுஞ்செய் திக்கு வாடிக்கையாளரிடம் கட்ட ணம் வசூலிக்கிறது. இதற்கு யார் உரிமை அளித்தது? வங்கி தொடர் பான சட்டங்களும் நுகர்வோருக்கு எதிராகவே உள்ளன. நுகர்வோரா கிய நாம் அதிக உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஈக்யுடாஸ் நுண் நிதிநிறுவன நுகர்வோர் வங்கி தலைவர் ராகவன் பேசும்போது, ‘‘வங்கிகளிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக் கிலும் 40 சதவீதம் வரை மறைமுகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எங்கள் நிறுவனம் நிதிசேவையைத் தாண்டி எந்தவொரு நிறுவனப் பொருளையும் எங்களது வாடிக் கையாளருக்கு விற்பதில்லை என கொள்கை முடிவு எடுத்துள்ளோம். சேமிப்பது மற்றும் முறையாக திருப்பிச் செலுத்தும் பழக்கத்தை அடித்தட்டு மக்களிடம் உருவாக்கி வருகிறோம். 7 மாநிலங்களில் தினமும் 1.2 லட்சம் பேர் வாங்கிய பணத்தை முறையாக திருப்பிச் செலுத்தி வருகின்றனர். மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் மோசடிகள் குறையும்’’ என்றார்.

ஐஎப்எம்ஆர் நிதி நிறுவன அதிகாரி தீப்தி ஜார்ஜ், ‘தி இந்து பிசினஸ்லைன்’ ஆர்த்தி கிருஷ்ணன், முன்னாள் வங்கி குறை தீர்ப்பாய அதிகாரி எஸ்.கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றுப் பேசினர். முன்னதாக சிஏஜி மைய இயக்குநர் சரோஜா வரவேற்க, மடோனா தாமஸ் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in