

தாம்பரம் சுற்றுப்பகுதிகளில் அடிக்கடி மின்கம்பிகள் அறுந்து விழுவதாகவும், மின் அழுத்தம் குறைவாக கிடைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
‘வார்தா’ புயலால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின் கம்பங்கள், கம்பிகள், டவர்கள் சேதமடைந்தன. புயல் ஓய்ந்து 10 நாட்களுக்கு பிறகே பெரும்பாலான இடங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. மாம்பாக்கம், வேங்கடமங்கலம், ஆதனூர், கிளாம்பாக்கம், ஐயஞ் சேரி, ஊரப்பாக்கம், கொளப்பாக் கம் உள்ளிட்ட கிராம பகுதிகளில், மின்தடையால் ஏற்பட்ட துயரம் இன்னும் தீரவில்லை. மின்சாரம் கிடைத்துள்ள பகுதிகளில் முறை யான பராமரிப்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொள்ளவில்லை
மேலும், புதிதாக அமைக்கப் பட்ட மின் கம்பிகளில், உரசல் ஏற்படுவதாகவும், சில இடங்களில், மின் கம்பிகள் அறுந்து விழுவ தாகவும், சில நேரங்களில் மின் அழுத்தம் பிரச்சினையால் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதடை வதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புயலால் மின்வாரியம் கடுமையான சேதத்தை சந்தித்தது. தற்காலிகமான சீரமைப்புப் பணிகள் மட்டுமே நடந்துள்ளன. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனாலேயே அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இந்த பிரச்சினை தீர இன்னும் 10 நாட்கள் ஆகும் என்றார்.