Published : 29 Oct 2013 09:28 AM
Last Updated : 29 Oct 2013 09:28 AM

ஆம்னி பஸ்களின் புதிய கட்டணம் அறிவிப்பு - அதிகம் வசூலித்தால் சங்கத்தில் புகார் செய்யலாம்

ஆம்னி பஸ்களின் புதிய கட்டணத்தை அகில இந்திய ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக கட்டணம் இருக்கும் என்று சங்கத் தலைவர் ஏ.பாண்டி தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது: அகில இந்திய ஆம்னி பஸ் உரிமையாளர் மற்றும் ஆப ரேட்டர்கள் சங்கம் (ஏஐஓபிஓஏ) என்ற புதிய சங்கத்தைத் தொடங்கியுள்ளோம். இதில் 120 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் மொத்தம் 650 ஆம்னி பஸ்கள் இருக்கின்றன. மக்களின் வசதிக்காக கட்டணத்தை பாதியாகக் குறைத்துள்ளோம்.

அதன்படி, சாதாரண காலங்களில் ஏ.சி. இல்லாத ஆம்னி பஸ்களில் கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாயும், ஏ.சி. பஸ்களில் ரூ.1.50ம் வசூலிக்கப்படும். அதுபோல, பண்டிகைக் காலங்களில் சாதாரண பஸ்களில் கிலோ மீட்டருக்கு ரூ.1.50-ம், ஏ.சி. பஸ்களில் ரூ.1.80ம் வசூலிக்கப்படும்.

இந்த தீபாவளிக்கு 30 மற்றும் 31-ம் தேதிகளில் மட்டும் குறைவான கட்டணம் வசூலிக்கப்படும். இதுபோல நெல்லை, தூத்துக்குடி, கன்னியா குமரி உள்பட மற்ற அனைத்து ஊர்களுக்கும் கிலோ மீட்டருக்கு ரூ.1.50, ஏ.சி.பஸ்களில் 1.80 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.

இன்று முதல் டிக்கெட் விற்பனை

சென்னை எழும்பூர், கோயம்பேடு, பெருங்களத்தூர் ஆகிய 3 இடங்களில் டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைத்துள்ளோம். இவற்றில் செவ்வாய்க்கிழமையில் இருந்து காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை டிக்கெட் விற்பனை செய்யப்படும். கூடுதலாக கட்டணம் வசூலித்தால், அகில இந்திய ஆம்னி பஸ் உரிமையாளர் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கத் தலைவரிடம் 044-43838329, 9894686544 என்ற எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரி விக்கலாம். எங்கள் சங்கத்தைச் சேர்ந்த பஸ்களில் ஏ.ஐ.ஓ.பி.ஓ.ஏ. என்ற ரவுண்ட் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் என்றார்.

புதிய கட்டண விவரம்

சென்னை - மதுரை - ரூ.682 - ஏ.சி. ரூ.819

சென்னை – திருச்சி - ரூ.486 - ஏ.சி. ரூ. 586.

சென்னை – சேலம் - ரூ.504 - ஏ.சி. ரூ.605

சென்னை - ஈரோடு - ரூ.599 - ஏ.சி. ரூ.713

சென்னை – திருப்பூர் - ரூ.684 - ஏ.சி. ரூ.822

சென்னை - கோவை - ரூ.746 - ஏ.சி. ரூ.895

சென்னை – தஞ்சாவூர் - ரூ.507 - ஏ.சி. ரூ.608

சென்னை - கும்பகோணம் - ரூ.411 - ஏ.சி. ரூ.493

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x