Published : 16 Jul 2016 08:18 AM
Last Updated : 16 Jul 2016 08:18 AM

அனைத்து வேளாண் இழப்புகளுக்கும் விவசாயிகளுக்கு இனி இழப்பீடு: புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா

விதைப்பு பொய்த்தல், நடவு செய்ய இயலாத நிலை, இயற்கை இடர் பாடு, அறுவடைக்குப் பிந்தைய இழப்பு ஆகிய அனைத்து இழப் புகளுக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் முதல்வர் ஜெ ய லலிதா தலைமையில் வேளாண் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், பயிர்க் கடன் தள்ளுபடி, டெல்டா மாவட்ட குறுவை சாகுபடி, பயிர் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட து. இதில் எடுக்கப்பட்ட முடிவுக ளின்படி, புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உழவர்களின் வாழ்வு வளம் பெற தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன. விவசாய இடு பொருட்களை உரிய காலத்தில் வழங்கி, தரமான விதைகளும் உற்பத்தி செய்து வழங்கப்படுகின் றன. சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவ சாயிகளுக்கு 75 சதவீத மானியம் என்ற அடிப்படையில் நுண்ணீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. வேளாண் தொழி லாளர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேளாண்மையை இயந்திரமயமாக்கும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. மேலும், புதிய உத்திகள், தொழில்நுட்பங் களை விவசாயிகளுக்கு அறி முகப்படுத்த தேவையான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன.

இதன் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் உணவு தானிய உற்பத் தியில், புதிய சாதனைகள் படைக் கப்படுகின்றன. கடந்த ஆண்டு இதுவரை இல்லாத உயர் அளவாக உணவு தானிய உற்பத்தியில் 1.30 கோடி மெட்ரிக் டன் என்ற அளவை தமிழகம் எட்டியுள்ளது.

விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் தேர்தல் அறிக் கையில் வாக்குறுதியாக அளிக் கப்பட்டது. இதன்படி, கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசா யிகள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தர கால வேளாண்மை கடன், பண்ணை சார்ந்த நீண்ட கால கடன்கள் என அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

பயிர் காப்பீட்டுத் திட்டம்

மேலும், எங்கள் தேர்தல் அறிக் கையில் மேம்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப் படும் என்ற வாக்குறுதி அளிக்கப் பட்டிருந்தது. இதன்படி, மாநில அரசின் பங்களிப்புடன் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள பிரதமரின் பயிர் காப்பீட்டுத் தி்ட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படு கிறது.

ஏற்கெனவே உள்ள பயிர் காப்பீட் டுத் திட்டத்தில், இழப்பை வரையறை செய்ய தற்போது பிர்க்கா அளவில் கணக்கெடுக் கப்படுகிறது. புதிய திட்டப்படி, கிராம அளவில் கணக்கெடுக்கப்ப டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு துல்லியமாக கணக்கிடப்பட்டு இழப்பீட்டு தொகையை விவசாயி கள் பெற முடியும்.

இதுவரை மகசூல் இழப்பு அடிப்படையில் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. புதிய திட் டப்படி, விதைப்பு பொய்த்தல், நடவு செய்ய இயலாத நிலை, பயிர் விதைப்பு முதல் அறுவடை வரையிலான காலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடு, அறுவடைக் குப் பின் வயல் அளவில் ஏற்ப டும் இழப்பு உள்ளிட்ட அனைத்து இழப்புகளுக்கும் இழப்பீடு வழங் கப்படும்.

இழப்பீட்டை கணக்கிடும் ஈட்டு றுதி நிலை அதிக பாதிப்புக்குள் ளாகும் 9 மாவட்டங்களுக்கும் 60-லிருந்து 70 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்ட விவசாயிகள் அதிக இழப்பீட்டுத் தொகை பெற இயலும்.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு வேளாண் பயிர்களுக்காக விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். இதில், அக்டோபர் முதல் மார்ச் வரை யிலான ரபி பருவத்தில், நடவுக் காலத்துக்கு 1.5 சதவீதம் செலுத்த வேண்டும். ஏப்ரல் முதல் செப்டம் பர் வரையிலான காரிப் பருவ காலத்துக்கு 2 சதவீதம் செலுத்த வேண்டும். மீதமுள்ள காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீதங்களை வழங்கும்.

இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதால், தமிழக அர சுக்கு அதிகளவு செலவு ஏற்படும். இருப்பினும், விவசாயிகளுக்கு அதிக பலன் அளிக்கும் திட்ட மாக இது இருப்பதால் கூடுதல் செலவை அரசு மனமுவந்து ஏற்றுக்கொள்ளும். இதுவரை பயிர் காப்பீட்டு கட்டண மானியமாக ஆண்டுக்கு சராசரியாக ரூ.40 கோடி மட்டுமே அரசு செலுத்தி யது. புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதால், கடந்தாண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் எண்ணிக்கை அளவில் தற்போதும் விவசாயிகள் காப்பீடு செய்தால், சுமார் ரூ.500 கோடி காப்பீட்டு மானியமாக தமிழக அரசு வழங்க வேண்டும். இன்னும் அதிகளவில் விவசாயிகள் காப்பீடு செய்தால், அரசு வழங்க வேண்டிய காப்பீட்டு மானியம் இன்னும் அதிகரிக்கும்.

தென்னை விவசாயிகளுக்கு தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் தென்னை மரக் காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத் தப்படும். பயிர் காப்பீட்டுத் திட் டத்தை பொறுத்தவரை, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து உடனடியாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு செயல் படுத்தப்படுகிறது. இதற்கான உத்தரவு துறைக்கு வழங்கப் பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x